சீனாவுக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய ட்ரோன்!!!

இந்திய ட்ரோன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாக சீனா குற்றம்  சுமத்தியுள்ளது. இத்தகவலை, அந்நாட்டு அரச  ஊடக நிறுவனமான ஸிங்ஹுவா வெளியிட்டுள்ளது.

“இந்தியாவின் இந்நடவடிக்கை எமது பிராந்திய இறையாண்மையை மீறும் செயல். இதையிட்டு நாம் அதிருப்தியடைந்துள்ளதுடன் எமது எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்” என இராணுவ உயரதிகாரி ஸேங் ஷூலி குறிப்பிட்டிருப்பதாகவும்  அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மேற்படி சம்பவம் எப்போது, எங்கே நடந்தது என்பது குறித்து சீனா தெரிவிக்கவில்லை.