சிவன்ராத்திரி அன்று மட்டுமே கண்டு கொள்ளப்படும் சில கடவுள்கள்!

நாம் வாழும் பூமி தோன்றி 460 லிருந்து 500 கோடி ஆண்டுகளாகின்ற இன்னும் 500 கோடி ஆண்டுகளில் பூமிக்கும்,  சூரியனுக்கும்  கூட  அழிவு உண்டு.  அதனால்  கடவுளுக்கும் அழிவு உண்டு.  நாத்கிகமல்லாத  அறிவியல் பூர்வமான, சில தகவல்களைக் கொண்டு கடவுளுக்கும் சாவு உண்டு என்பதை அறிந்துக் கொள்வோம்.

இந்நிலையில் சாமிகளில்  இரண்டு வகை உண்டு.  வசதியான சாமி, வசதியில்லாத சாமி.  சிவன்,விஷ்ணு,பிரம்மா, இந்திரன், விநாயகர் என பூனூல், சைவசாப்பாடு, நாம் நேரடியாக சாமி கும்பிட  முடியாதபடி காணப்படுகின்றன. இடையில் வேதம் கற்ற புரோகிதர், முறைப்படி கட்டப்பட்ட கோயில்கள், தங்க ஆபரணங்கள், நிறைய சொத்துக்கள்,தினந்தோறும் பூஜைகள், பக்தர்களுக்கு தரிசனம் இப்படி இன்னும் சாமிகளுக்கு உண்டு.

மேற்கண்ட வசதியான சாமிகள் ஆரியர்கள்  இந்தியாவிற்குள்  நுழைந்த போது உருவாக்கப்பட்ட கற்பனை கடவுள்கள்.  நான்கு   கை, பத்துதலை, தானாக கையில் சுற்றுகிற சக்கரம், விஸ்வரூபம் எடுக்கும் தன்மை என நிஜத்தில் நடக்காத  விடயங்களோடு  உருவாக்ப்பட்டவை.

சுடலைமாடன்,முனியாண்டி,மூத்தாலமன், வீரசின்னம்மா, கருப்பன், மதுரைவீரன்  இந்த சாமிகள் வசதியில்லாத சாமிகள். இந்த சாமிகளுக்கு சில இடங்களில் கோயில் இருந்தாலும்,பெரும்பாலும்  இவை ஆலமரம், தெருவேரம்,சாலையோரங்கள், நடுகாட்டுக்குள் இருக்கும்.gbf vhg

இந்தசாமிகள் மிரட்டும் பார்வையோடு  கையில் அருவாள் வைத்திக்கும். சிவன்ராத்திரி அன்று மட்டுமே இந்த சாமிகளுக்கு கவனிப்பு கிடைக்கும். கிடாவெட்டி, பொங்கல் வைத்து,சில சாமிகளுக்கு  மதுபானம்(விஸ்கி,பிராந்தி)  வைத்து  பெரிய  கவனிப்பு கிடைக்கும்.  மற்ற நாட்களில் இந்த சாமிகளை கண்டு கொள்ளமாட்டார்கள்.

சுடலைமாடனும், வீரசின்னம்மா,மதுரைவீரனும் தங்கள் சமூகத்திற்காக உயிர் நீத்தவர்கள்.தங்கள் சமூகத்திற்காக பாடுபட்டவர்கள், உயிர்நீத்தவர்களை,நல்ல மனிதர்களை ஒரு சமூகம்,ஒரு இனம் தங்கள் தலைவர்களாக,கடவுளாக ஏற்றக்கொள்கிறார்கள்.

பக்தர்கள் வேண்டி, விரும்பி கும்பிடும் வரைதான் சாமிகளுக்கு மதிப்புண்டு , அந்த சாமிக்கு சக்தி  இல்லை, கும்பிட்டுபயனில்லை என நினைக்க தொடங்கினால் அந்த சாமிக்கு சாவு  நெருங்கிவிடும்.

ஆரிய கடவுள்களில், அதாவது வசதியான கடவுள்களில் சிவன்,விஷ்ணு,பிரம்மா இந்த மூவரில் பிரம்மாவை கண்டுகொள்ள ஆளில்லை. கோயில் கூட இருப்பதாக தெரியரில்லை. பெண்கடவுள்களில் சரஸ்வதி, சரஸ்வதி பூஜை அன்று மட்டுமே கும்பிடுவார்கள் அவ்வளவுதான்.

ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த போது இந்திரன் பெரிய கடவுள் இப்போது அவருக்கு மதிப்பில்லை.  ஆரிய கடவுளான விநாயகருக்கு தற்போது மரியாதை அதிகம்.  15 ஆண்டுகளுக்கு முன் விநாயகர் சிலை பால் குடிப்பதாக செய்தி பரவ தொடங்கின.

சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களை படித்தால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் வணங்கி வந்த கடவுள்கள் பற்றியும், அந்த கடவுள்கள் தற்போது வணங்கப்படுவதில்லை என்பதையும் தெரிந்து கொள்ளாம்.

கொற்றவை என்ற பெண் கடவுள் ஆதி தமிழர்களின் கடவுள், மீனாட்சி இல்லாத மதுரையை நினைத்து பார்க்க முடியமா? சிலப்பதிகார காலத்தில்  மீனாட்சியம்மன் இல்லை, மதுராபதி என்ற கடவுள் தான் மதுரையின் முக்கிய கடவுள்.

விநாயகர் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் இல்லை. வேதமதம் என்ற மதம்  இருந்துள்ளது ( இந்து மதம் அல்ல). சிவபெருமானின் மகனாக சாத்தான் வழிபாடு இருந்துள்ளது.

அரசர்களின் ஆதரவோடு பரவியிருந்து சமண மதமும், அதன் மூலவராகி மகாவீரர் வழிபாடும்  தற்போது திருவண்ணாமலை பகுதியில் தலைமையிடம் அமைக்கப்பட்டு  ஒரு சிறு பகுதியினர் மட்டுமே வணங்குகின்றனர்.