சிவனொளிபாத மலைக்கு செல்வோரின் கவனத்திற்கு!

சிவனொளிபாத மலையின் உச்சிப் பகுதியில் தற்போது கடும் குளிரான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இங்கு வருவோர் அதற்கு ஏற்றால் போன்ற ஆடைகளை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

சிவனொளிபாத யாத்திரை காலம் ஆரம்பித்த நாளிலிருந்து இன்றைய தினம் கடந்த நாட்களை விட அதிகமான குளிரான காலநிலை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் சில நாட்களுக்கு தொடரக்கூடுமெனவும் இதனால் குளிருக்கு ஏற்றால் போன்ற ஆடைகளுடன் வருகை தருவதே சிறந்தது எனவும் அங்குள்ள விகாரைக்கு பொறுப்பான தேரர் தெரிவித்துள்ளார்.