சிவகார்த்தியுடன் ஜோடி சேரும் பாலிவூட் பிரபலம்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான `வேலைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் `சீமத்துரை’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாளாக நடந்து வந்த நிலையில், இருவரும் இணைவது தற்போது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

tsudgj

இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடமும், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தையும் 24ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.