சாதாரண தரப்பரீட்சையின் செய்முறை பரீட்சை எதிர்வரும் 20 திகதி ஆரம்பம்…!

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20-ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையளர் பி சனத் பூஜித அறிவித்துள்ளார்.

மேலும், புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக செய்முறைப்பரீட்சைகள் 20-ம் திகதி தொடக்கம் மார்ச் 3-ம் திகதி வரையில் நடைபெறும் எனவும் பழைய பாடத்திட்டத்திற்கமைவாக செய்முறைப்பரீட்சைகள் மார்ச் மாதம் 2-ம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.