சந்திரன் பூமியோடு மோதும்? விஞ்ஞானிகள் வெளியிட்ட எச்சரிக்கை பதிவு!

நம் கண்களுக்கு வேண்டுமானால், பூமியானது நமக்கு மிகவும் நெருக்கமான மற்றும் புரிதல்கள் நிறைந்த ஒரு வாழ்விடமாக இருக்கலாம்.

 

ஆனால் அறிவியல் கண்கொண்டு பார்த்தால் – விண்கல்லாக இருந்தாலும் சரி, நட்சத்திரமாக இருந்தாலும் சரி – பூமி உட்பட இந்த அண்டத்தில் மிதக்கும் அனைத்துமே ஒரு விண்வெளி பொருட்கள் தான்.

 

விண்பொருட்களான பூமி மற்றும் சந்திரன் நிகழ்த்திக்கொள்ளப்போகும் ஒரு பேரழிவு மோதல் நிகழ்வு பற்றிய திகிலூட்டும் ஆய்வு தொகுப்பே இது.

 

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 சென்டிமீட்டர்கள் சந்திர கிரகமானது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 சென்டிமீட்டர்கள் என்ற அளவில் பூமியை விட்டு தள்ளி நகர்ந்து செல்கிறது என்று கூறும் விண்வெளி ஆய்வாளர்கள், அதே சந்திர கிரகமானது இறுதியில் பூமியை நோக்கிய பாய்ச்சலை நிகழ்த்துமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

கடல்களில் அலைகள் ஏற்பட காரணமான பூமியில் உள்ள கடல்களில் அலைகள் ஏற்பட காரணமான சந்திரனின் ஈர்ப்பு விசை உந்துதலின் விளைவாக, நிலவு மெதுவாக பூமியை நோக்கி வரும், இறுதியில் பூமியோடு மோதல் நிகழ்த்தும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

 

இறுதிக்கட்ட அலை பரிணாம வளர்ச்சி இதாஹோ பல்கலைக்கழகத்தின் கிரக விஞ்ஞானியான ஜேசன் பர்ன்ஸ், ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில்,

 

​​”பூமி மற்றும் சந்திர மண்டலத்தில் இறுதிக்கட்ட அலை பரிணாம வளர்ச்சி (tidal evolution) என்பது நிலவின் தூண்டுதலாக உருமாறி அதன் விளைவாக பூமி-நிலவு பேரழிவு மோதல் ஒன்றை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

 

கிரகத்தின் புவியீர்ப்பு இழுவை சந்திரனை தொட அதாவது நம் கிரகத்தின் சுழற்சிக்கான காலம் மெதுவாகி, அது சந்திரனின் சுற்றுப்பாதை காலத்தோடு பொருந்தும்.

 

அது நிகழும்போது, ​​நமது கிரகத்தின் புவியீர்ப்பு இழுவை சந்திரனை தொட, அது மெதுவாக நிலவை பூமியை நோக்கி நகர்த்தும்.

 

சுற்றுப்பாதை இயக்க ஆற்றலைத் துண்டித்து “இறுதியில் சந்திர கிரகம், பூமியின் சுழற்சியை உள்வாங்கி, அதன் சுற்றுப்பாதை இயக்க ஆற்றலைத் துண்டித்து, பூமியுடன் மோதல் ஒன்றை நிகழ்த்தும்” என்று கிரக விஞ்ஞானியான ஜேசன் பர்ன்ஸ் விளக்கமளிக்கிறார்.

நிகழ இன்னும் 65 பில்லியன் ஆண்டுகள் ஆகும் உடனே பீதியடைய தேவையில்லை. இந்த பூமி மற்றும் சந்திர கிரக மோதலானது நிகழ இன்னும் 65 பில்லியன் ஆண்டுகள் ஆகும். அந்த 65 பில்லியன் ஆண்டுகளில், நமது சூரிய மண்டலத்தின் ஒட்டுமொத்த கதையே மாறிப்போகலாம்.

 

பெரும்பகுதியை அது விழுங்கி முடித்திருக்கும். சூரியன், அதன் மிகப்பெரிய கட்டமான – அதன் வாழ்நாள் முடிவடையும் தருணத்தை எட்டியிருக்கும், அது விரிவடைய தொடங்கும், இறுதியில் நமது சூரிய மண்டலத்தின் பெரும்பகுதியை அது விழுங்கி முடித்திருக்கும்.

 

சூரியனின் அணு எரிபொருள் காலியாக தொடங்கும் அம்மாதிரியான சூரிய மரண நிகழ்வில், பூமி மற்றும் அதன் சந்திர மண்டல அமைப்புகள் தம்மை தக்கவைத்துக்கொள்ளுமா.?? பிழைக்குமா.? என்பதை நாம் இப்போது உறுதியாக கூற முடியாது.

 

ஆனால், இப்போதிலிருந்து சுமார் ஆறு பில்லியன் ஆண்டுகளுக்குள் நமது சூரியனின் அணு எரிபொருள் காலியாக தொடங்கும் என்பது மட்டும் உறுதி.

‘இயற்கையான’ செயற்கைக்கோள் எப்படி உருவானது சுவாரஸ்யமாக, ஒரு சமீபத்திய ஆய்வின் மூலம் நமது ‘இயற்கையான’ செயற்கைக்கோள் எப்படி உருவானது என்பதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளன.

 

ஒரு முன்னணி கோட்பாட்டின்படி, மிகவும் ஆரம்ப கால பூமி கிரகம் மற்றும் – செவ்வாய் கிரக அளவிலான – மற்றொரு கிரகமான தீயா ஆகிய இரண்டிற்கும் இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாய் உருவானதே – நமது நிலவு என்று நம்பப்படுகிறது.

 

தொடர்ச்சியான பாரிய தாக்கங்களின் விளைவாக மறுபக்கம் இஸ்ரேலின் விண்வெளி வல்லுநர்கள் சமர்ப்பிக்கும் ஒரு புதிய கோட்பாட்டின் கீழ், நமது சந்திர கிரகமானது ஒற்றை தாக்குதலின் விளைவாக உருவானது அல்ல, மாறாக தொடர்ச்சியான பாரிய தாக்கங்களின் விளைவாக உருவாகியிருக்கக்கூடும் என்று கூறுகிறது.

 

அடிப்படை அறிவியலை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது இதற்கு ஆதரவாய், புவியின் இயற்கை செயற்கைக்கோளான நிலவானது – மோதல் நிகழ்த்திய இதர வானுலக பொருட்களின் கூறுகள் மற்றும் கலவைகளை அதிகம் கொண்டிருக்காமல் – ஏன் பெரும்பாலும் பூமி போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது என்பது சார்ந்த ஆய்வறிக்கை ஜர்னல் நேச்சர் ஜியோசினீசில் வெளியிடப்பட்டுள்ளது.

 

இதிலிருந்தே விண்வெளி பொருட்கள் ஒன்றையொன்று பாதிக்கக் கூடியது என்ற அடிப்படை அறிவியலை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.