சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரட்டுக்களை கொண்டு வந்த இரண்டு பெண்கள் கைது…!

சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சிகரட்டுக்களை நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு பெண்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

டுபாயில் இருந்து இன்று காலை இலங்கை வந்த குறித்த பெண்களிடமிருந்து 159 பெட்டிகளில் இருந்த 41,040 சிகரட்டுக்கள் போதை தடுப்பு சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மீரிகம மற்றும் வாரியாபொல பிரதேசங்களைச் சேர்ந்த 40 மற்றும் 31 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.