க.பொ.த.சாதாரணதர பரீட்சைகள் சார்ந்த செயலமர்வுகளுக்கு எதிர்வரும் 21ம் திகதி வரை தடை!!!

கல்வித் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் சார்ந்த கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடத்த நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 21ம் திகதி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பரீட்சைகள் சார்ந்த கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புகள், தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் மூலமாக வெளியிடுதல் என்பன முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கை மீறப்படும் சந்தர்ப்பத்தில், அது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடுகளை வழங்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.