க.பொ. உயர்தர பெறுபேறுகளை பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு!

2016 ஆண்டுக்கான உயர்தர பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது.

இம்முறை கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்., இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும், 74 ஆயிரத்து 614 தனியார் பரீட்சார்த்திகள் அடங்குகின்றனர்.

இந்நிலையில்  மாணவர்கள் வாழ்க்கையில் உயர்தர பெறுபேறுகள் என்பது ஒரு முக்கியமான ஒரு பகுதியாகும். குறிப்பாக பலருடைய வாழ்க்கையினை தீர்மானிக்கின்ற ஒரு அம்சமாகும்.

இருப்பினும் மாணவர்கள் ஒன்று நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும்.. உயர்தர பெறுபேறுகள் மட்டும் உங்கள் வாழ்க்கையினை தீர்மானிக்க போவதில்லை. பெறுபேறுகள் எப்படி வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உங்களுக்கு வர வேண்டும்.

இலங்கையின் வளர்ச்சியடைந்துள்ள கல்வித்துறை மற்றும் தொழிநுட்ப துறை என்பன தற்போது மாணவர்களுக்கு பல கல்வி  வாய்ப்புக்களை  வழங்கியுள்ளது.

உதாரணமாக…..

Image may contain: text

No automatic alt text available.

இதனைப்போல எத்தனையோ வாய்ப்புக்கள்….

ஆகவே உயர்தர பரீட்சையில் வெற்றிப்பெறுகின்ற மாணவர்கள் தனது அடுத்த கட்ட கல்வி நடவடிக்கையினை  வெற்றிக்கரமாக தொடரலாம். மாறாக பரீட்சை பெறுபேறுகளில் திருப்தி அடையாத மாணவர்கள் மன விரக்தி அடைய வேண்டாம்..

பரீட்சைகள் மட்டும் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்க போவதில்லை.. கடந்த காலத்தில் பெறுபேறுகளில் விரக்தி அடைந்த பல மாணவர்கள்  முட்டாள்தனமான முடிவுகளை எடுத்து அவர்களது வாழ்க்கையினையும், அவர்களது பெற்றோர்களின் வாழ்க்கையினை சீரழித்து விட்டார்கள்..

எந்த பெற்றோரும் மாணவர்கள் வாழ்வதால் மட்டுமே முழுமையான திருப்தி அடைவார்கள்.. பெறுபேறுகள் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே…முட்டாள்தனமான முடிவுகளை எடுக்காமல் தொடர்ந்து இரண்டாவது முறை முயற்சித்து  பார்க்கலாம்…

இல்லையேல்  இலங்கையில் உங்களுக்காக இலங்கை அரசானது இலங்கை பூராகவும் தொழிநுட்ப கல்லூரிகளை நடாத்தி வருகின்றது ..உங்களது தொழில் சார் கல்விகளை கற்று அரச சான்றிதழுடன் உங்களது வாழ்க்கையினை பிரகாசமாக்கி கொள்ளலாம்….

இல்லையேல் எமது லங்காபுரியுடன் தொடர்பு கொள்ளவும் உங்களது அடுத்த கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக வழிகாட்ட லங்காபுரியின் மாணவர் மட்டும் பகுதி தயாராகவுள்ளது..

இந்த விடயத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த அவதானமாக மாணவர்களை கையாளவும்… குறைந்த பெறுபேறுகளை எடுக்கின்ற மாணவர்கள் மீது உங்களது கோபத்தினை காட்ட முன்வரவேண்டாம். தட்டிக்கொடுங்கள் அவர்களது வாழ்க்கையினை பிரகாசப்படுத்த இலங்கையில் எத்தனையோ கல்வி வாய்ப்புக்கள் இருக்கின்றது..

அவர்கள் மனம் புண்படும் எந்த நடவடிக்கைகளையும் மேற்க்கொள்ள வேண்டாம்…

குறிப்பாக மேலதிக வகுப்பு நடாத்துகின்ற சில ஆசிரியர்கள் தமது வகுப்புக்களின் தரத்தினை கூட்டவும் வருமானம் ஈட்டவும் மாணவர்களை பகடை காய்க்காளாக பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள்.  இவர்களே பாடசாலை ஆசிரியர்களை விட குறைவான பெறுபேறுகளை பெறுகின்ற மாணவர்களின் மனங்களை புண்படுத்துகின்றார்கள்

பெற்றோர்களே உங்களது பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்.

குறைந்த பெறுபேறுகளை பெறுகின்ற மாணவர்கள் அச்சப்படவோ, கவலைப்படவோ வேண்டாம்.. உங்களுக்கு பிரகாசமான வாழ்க்கை காத்திருக்கின்றது. அவசரப்பட வேண்டாம்..அச்சப்பட வேண்டும்.. நீங்கள் சாதிக்க வேண்டியவை அதிகம் காணப்படுகின்றது.. உயர்தர பெறுபேறுகள் பட்டும் உங்கள் வாழ்க்கையினை தீர்மானிக்கப்போவதில்லை.

இலங்கையில் சாதித்த பலபேர் உயர்தர பெறுகளில் முதல் தடவை தோற்றி தோற்றுப்போனவர்களே.. ஆகவே தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள்…வெற்றி காத்துக்கொண்டிருக்கின்றது..

உங்களது கோரிக்கைகளை  அனுப்ப வேண்டிய முகவரி…

atoz@lankapuri.com

இப்படிக்கு 

லங்காபுரியின் மாணவர் மட்டும் பகுதி