கை மாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி?

2018ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடந்த 11ஆம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலானது இலங்கையில் புதிய அரசியல் மாற்றத்தை நிலைநாட்ட உள்ளது என்பது யாவரும் அறிந்த ஒன்றே.

மேலும் இத்தேர்தலில் ஸ்ரீலங்கா பெரமுன கட்சியானது வரலாறு காணாத வெற்றியை அடைந்துள்ளது. இந்நிலையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டார்.

இந்நிலையில் இச்சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ள தாம் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை நிச்சயமாக நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால், மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக அதனை வழங்கமாட்டார் என்று எனக்குத் தெரியும். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கூட்டு எதிரணி ஒருபோதும் சூழ்ச்சிகளில் ஈடுபடாது என்றும் அறிவித்துள்ளார்.