கையெழுத்துக் கூறும் உங்கள் குணங்கள்!

கையெழுத்து குறித்து ஆராயும் கல்விக்கு ‘கிராபாலஜி’ என்று பெயர். இது ஒரு பழங்கால கலையாகும். இதன்படி ஒருவரது கையெழுத்தை ஆராய்வதன் மூலம் அவரது குணாதிசயங்கள், எதிர்காலம் ஆகியவை குறித்து அறிந்துகொள்ளமுடியும் என்று கருதப்படுகிறது. மனிதர்களின் கையெழுத்து ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் கையெழுத்தும் ஏதாவது ஒரு வகையில் மாறுபட்டதாகவே இருக்கும். எழுத்துக்களை எழுதும் முறை, அந்த எழுத்தின் மீது ஏற்படுத்தும் அழுத்தம், வார்த்தைகள் இடையே கொடுக்கும் இடைவெளியின் தூரம் உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதன் அடிப்படையில்

 1. அழுத்தம்.!
  எழுத்தின் மீது ஒருவர் கொடுக்கும் அழுத்தம் எவ்வாறு உள்ளது என்பதன் மூலம் ஒருவரது விடாமுயற்சி மற்றும் பிடிவாத குணம் குறித்து அறியலாம். காகிதத்தில் ஒருவர் எழுதும் எழுத்து, அந்த காகிதத்தின் பின்பிறம் தெரிந்தால் அவர் ஊக்கமும், உற்சாகமும் நிறைந்தவராக இருப்பார். அதேநேரத்தில் அவரிடம் பிடிவாத குணமும் அதிகமாக இருக்கும்.
 2. எழுத்தின் கோணம்.!

  young pretty girl learn drawing with blue pen
 3. சிலர் எழுதும் போது இடது அல்லது வலது புறத்தில் சரிவாக எழுதுவதுண்டு. இவ்வாறு எழுத்துக்களை சரித்தும், கோணலாகவும், நேராகவும், சாய்த்தும் சிலர் எழுதுவது உண்டு. வலது அல்லது இடது புறம் சரித்து எழுதுவதன் மூலம் ஒருவர் எந்த அளவுக்கு நட்புடன் பழகுவார் என்பதை அறிந்து கொள்ளமுடியும். ஒருவரது எழுத்து வலது புறம் சரிவாக இருந்தால் அவர் திறந்த மனதுடன் பழகுவார். இயற்கையாகவே கலகலப்பாக பேசும் குணம் கொண்டவர். இடதுபுறம் சாய்வாக எழுதுபவர்கள் அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரிடம் எளிதில் பேசிப்பழக தயங்குவார்கள்.
 4. எழுத்தின் அளவு.!
  ஒருவர் எழுதும் போது அவர் எழுதும் எழுத்தின் அளவை வைத்து அவர் எந்த அளவுக்கு தன்னம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்துகொள்ளலாம். ஒருவரது எழுத்து பெரிய அளவில் அழுத்தமாக இருந்தால் அவரது மனஉறுதியும், தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். எழுத்துக்கள் சிறிய அளவில் இருந்தால் அவரிடம் தன்னம்பிக்கை குறைவாக காணப்படும்.

‘ஐ’  என்று உச்சரிக்கப்படும் ஆங்கில எழுத்தை சிலர் பெரியதாகவும், அழுத்தமாக எழுதுவதுண்டு. அப்படி எழுதுபவர்கள் தங்களது லட்சியத்தை நிறைவேற்றவேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் தங்களது லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் செயல்திறன் மிக்கவர்களாவும் இருப்பார்கள்.

 1. எழுத்தின் இடைவெளி.!
  எழுதும் போது ஒவ்வொரு எழுத்துக்களும் நெருக்கமாக இருப்பது அல்லது ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகமாக இருப்பது உண்டு. இதில் வார்த்தைகளில் உள்ள எழுத்துக்கள் நெருக்கமாக இருந்தால் அவர்கள் அதிக நண்பர்களை பெற்றிருப்பார்கள். அந்த நண்பர்களிடம் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவர்களிடம் உள்ள குறைபாடு என்னவென்றால் நல்ல நண்பர்கள், தீய நண்பர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களிடம் இவர்கள் நெருக்கம் காட்டுவார்கள். மேலும் இத்தகைய எழுத்துக்களை எழுதுபவர்கள் எதிலும் ஒழுங்கான தன்மையை கையாள மாட்டார்கள். இவர்களிடம் எதையும் திட்டமிட்டு செயல்படுத்தும் குணம் இருக்காது.