கையடக்க தொலைபேசிகள் குறைந்த விலையில் மதுபானசாலைகளில் விற்பனை!

மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் 10 ஆயிரம் பெறுமதி வாய்ந்த தொலைபேசிகளை 1500 – 2000 இடையில் மதுபான சாலைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலை  இருப்பதாக   இன்றைய சிங்கள நாளேடு கட்டுரையில் குறிப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட பகுதியில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் 18- 35 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களில் 65 தொடக்கம் 70 வீதம் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவும் இவர்கள் கையில் காசு இல்லாத போது தங்களிடம் உள்ள கையடக்க தொலைபேசி அடையாள அட்டைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை அடகு வைத்து மதுபானம் அருந்துவதாகவும் இந்த மதுபான சாலைகளின் உரிமையாளர்களாக அரசியல் பிரமுகர்களே இருப்பதாகவும் தெரியவருகின்றது.

இவர்கள் இப்படியான முக்கிய ஆவணங்களை அடகு வைத்து குடிப்பதற்கு மதுபானசாலை  உரிமையாளர்ளே தங்களது ஊழியர்களுக்கு    ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அந்த செய்தி மேலும் தொடர்கின்றது.

மேலும் இவ்வாறான செயல்களின் ஈடுபடும் பிரதேசங்களாக அங்குராங்கெத்தை , ஹட்டன், மஸ்கெலியா, நோர்வூட், அப்கொட்,  பொகவந்தலாவ பகுதியில் அதிகமாக இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது.