கூலித் தொழிலாளியை உயிரோடு எரித்த கொடூரன்: விடியோ வெளியாகி பரபரப்பு!!

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அப்ரசுல் என்பவர் ராஜஸ்தானின், ராஜ்சமந்த் பகுதியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவரை அப்பகுதியை சேர்ந்தவர் கொடூரமான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். படுகாயமடைந்த அவர் உயிருக்காக போராடி கொண்டிருக்க அவர் மீது ஆயிலை ஊற்றி உயிருடன் எரித்துள்ளார்.
இந்த சம்பவத்தின்போது, சம்புலால் நண்பர் கொலை சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளார். கொலை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதன் அடிப்படையில் ஷாபு லால் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலையாளியின் சகோதரியுடன், அப்ரசுல் கள்ளதொடர்பு வைத்திருந்ததாகவும், அதற்கு பழிவாங்க இந்த கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், கொலை குறித்த உண்மை காரணம் இன்னும் வெளியாகவில்லை.

 

https://youtu.be/muHPYSsBctU

 

நன்றி – India Today