குரு பெயர்ச்சியால் யாருக்கு பண வரவு அதிகம்!

http://onlinerx365.com/cialis_oral_jelly_generic.html|Generic Cialis Oral Jelly Buy Cheap August 1, 2016 குருபெயர்ச்சி பலன்கள் Leave a comment 8,537 Views

சுப கிரகமான, குரு பகவான் அமரும் இடம் பாதிப்படையும் என்பதும், அவர் பார்க்கும், 5, 7, 9ம் ஸ்தானங்கள் சிறப்படையும் என்பதும் பொது விதி.

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று.. காசு, பணம் எனப்படும் பொருட்செல்வம். இன்னொன்று.. குழந்தைச் செல்வம்.

இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. தனம், புத்திர ஸ்தானங்களின் அதிபதி குருபகவான்.

நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும்.

ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் குரு அமையப்பெற்றால் தீர்க்க ஆயுள்,நல்ல செல்வம்,செல்வாக்கு ,சிறப்பான புத்திர பாக்யம்,அரசு வழியில் அனுகூலம்,தெய்வீக ஆன்மீக துறையில் நாட்டம் உண்டாகும்.

குரு பெயர்ச்சி இந்த ஆண்டு குரு பெயர்ச்சி, ஆடி அமாவாசை, ஆடி 18, ஆடிப் பெருக்கு, முருகனின் நாளான செவ்வாய் அன்று, முருகனின் நட்சத்திரமான பூசத்தன்று.

எண் கணிதப்படி கூட்டு எண் ஒன்று என்ற சூரியனின் ஆதிக்கத்தில் வருவதால், பல விசேஷ பலன்களை எதிர்பார்க்கலாம்.

இவ்வாண்டு நல்ல மழை உண்டு; அனைத்து நதிகளிலும், நீரோட்டம் உண்டு; விவசாயம் செழிக்கும்; அறிவியல் முன்னேற்றம் ஏற்படும் என்கின்றனர் ஜோதிடர்கள் குரு பகவான் அமரும் ஸ்தானம், ஒவ்வொரு ராசியினருக்கும் வேறுபடும்.

அதேபோல், அவர் பார்க்கும் ஸ்தானங்களும் வேறுபடும் என்பதால், ஒவ்வொரு ராசியினருக்கும் பலன்கள் வேறுபடும்.

2016-2017 குரு பெயர்ச்சியால் அதிக பண வரவு யாருக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள குரு பார்வை யார் ராசிக்கெல்லாம் தன ஸ்தானம்,பாக்யஸ்தானத்தை பார்க்கிறது என அறிந்து கொள்ள வேண்டும்.

குரு கன்னியில் இருந்து 5ஆம் பார்வையாக மகரம் ராசியை பார்க்கிறது. அது தனுசு ராசியினருக்கு தன ஸ்தானம் ஆகும்.

கும்பம் – ரிஷபம் ஏழாம் பார்வையாக மீனம் ராசியை பார்க்கிறது அது கும்ப ராசியினருக்கு தன ஸ்தானம் ஆகும்.

ஒன்பதாம் பார்வையாக ரிஷபம் ராசியை பார்க்கிறது அது மேஷம் ராசியினருக்கு தன ஸ்தானமாகும்.இந்த குரு பெயர்ச்சியினால் தனுசு ,கும்பம்,மேஷம் ராசியினருக்கு நல்ல தன வரவு இருக்கும்.

குரு பலம் பெற்றவர்கள் சிம்மம்,ரிஷபம்,மீனம்,மகரம் ,விருச்சிகம் இவர்கள் ராசியினருக்கு 2,5,7,9,11 ல் குரு வந்திருப்பதால் இவர்களுக்கும் பணம் சரளமாக வந்து சேரும். இந்த ராசிக்காரர்கள் குரு பலம் பெற்றவர்கள் ஆகின்றனர்.