குருநாகல் பகுதியில் பெண் ஒருவர் ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலி!!!

குருநாகல் பொல்பெத்திகம பகுதியில் பெண் ஒருவர் ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

திருமண நிகழ்வொன்றில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலாக மாறியுள்ள நிலையில் மோதல் சம்பவத்தினை சுமூக நிலைக்கு கொண்டு வர முயற்சித்த 53 வயதுடைய பிரேமாவத்தி எனும் பெண் தாக்குதலில் எதிர்பாரத வகையில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு பலத்த காயங்களுக்குள்ளான நால்வர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.