கிழக்கு மாகாணசபைக்கு சென்ற ஆதி குடிமக்களது தலைவர்!

தெஹியத்தகண்டிய பிரதேசசபைக்கு உட்பட்ட ஹென்னாகல எனும் பகுதியில் வாழ்த்துவரும் ஆதிக் குடிமக்களது தலைவர் ஊருவள்கே களுபண்டியா திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபைக்கு சென்றுள்ளார்.

தமது கிராமத்தில் நிலவி வருகின்ற வீதிப் பிரச்சினை தொடர்பில் முறைப்பாடு தெரிவிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

அம்பாறை – தெஹியத்தகண்டிய பிரதேசசபைக்கு உட்பட்ட ஹென்னாகல எனும் பகுதியில் ஆதிக்குடிமக்கள் வாழ்ந்துவருகின்றனர் அவர்களது கிராமத்திற்கு செல்லும் 6 கி.மீ நீளமான வீதி மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாது தெரிவித்த அவர் அது தொடர்பில் தீர்வினைப்பெற்றுத்தருமாறு கோரிய மகஜர் ஒன்றினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எம்.நசீர் அவர்களிடம் கையளித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் சிறந்த தீர்வினைப்பெற்றுக்கொள்ள தாம் ஆவனைசெய்வதாக சுகாதார அமைச்சர் தெரிவித்ததை அடுத்து தாம் சந்தோசத்துடன் தமது ஊருக்குத் திரும்புவதாக அவர் தெரிவித்தார்.