கினிகத்தேனை பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு  நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என கினிகத்தேனை பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

நீர்வீழ்ச்சிக்கு நேற்று காலை குறித்த இளைஞன் 11 நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அங்கு நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார்.

இளைஞனை  காப்பாற்ற  ஏனைய நண்பர்கள் முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில்  இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று  மாலை கினிகத்தேனை பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், இராணுவத்தினரும்,  பிரதேச மக்களும் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் 18 வயதான,  கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில், கல்வி கற்கும் விரோஜன பண்டார  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை  கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.