காஷ்மீர் எல்லையில் அதிரடியாக முறியடிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் அத்துமீறல்!

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லை பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அங்குள்ள கதுவா மாவட்டம் ஹிராநகர் பகுதியில் சில பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.

அப்போது அங்கு இருந்த ராணுவ வீரர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி உயிரிழந்தார்.

இதனை கண்ட மற்ற பயங்கரவாதிகள் இறந்த அவரின் உடலை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதனை தொடர்ந்து கதுவாவிலிருந்து அக்னூர் வரையிலான 192 கி.மீ இந்திய எல்லைபகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.