காலி கலவரத்தை தடுக்க தவறிவிட்ட இலங்கை பொலிஸார்..!!!

தென்னிலங்கையின் காலியில் இடம்பெற்ற அமைதியின்மையை தடுப்பதற்கும், கட்டுப்படுத்தவும் இலங்கை பொலிஸார் தவறிவிட்டதை  இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பகிரங்க மேடையொன்றில் வைத்து ஒப்புக்கொண்டுள்ளார்.

காலி கிங்தோட்டையில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து இடம்பெற்ற அமைதியின்மையை அடுத்து 19 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

இந்த மோதலை அடுத்து ஒருசில குழுவினர் முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமாக வர்த்தக நிலையங்கள் சிலவற்றை சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காலி பிரதேசத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பொலிஸ்மா அதிபர் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

காலியில் இடம்பெற்ற சம்பவத்தை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு இனி இப்படிப்பட்ட சம்பவங்கள் இடம்பெறாத வகையில் பார்த்துக் கொள்வதாகவும் பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளார்.