காற்று மாசுபடுவதால், ஆண்டுக்கு 65 லட்சம் பேர் மரணம்!

http://onlinerx365.com/levitra_soft_generic.html|Levitra Soft Generic Buy Cheapest June 28, 2016 சிறப்புச் செய்திகள் Leave a comment 240 Views

அவற்றில் வீட்டிற்குள் ஏற்படும் காற்று மாசினால் 35 லட்சம் பேரும், வெளிகாற்று மாசுபடுவதால் 30 லட்சம் பேரும் அதில் அடங்குவர்.

அதே நேரத்தில் காற்று மாசுபடுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் உயிரிழப்பில் பாதி அளவு இந்தியா மற்றும் சீனாவில் ஏற்படுகிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு 16 லட்சம் பேர் பலியாகின்றனர். சீனாவில் 22 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

இவை தவிர இந்தோனேசியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, மற்றும் மெக்சிகோவில் காற்று மாசினால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதற்கிடையே தற்போதைய நிலை தொடர்ந்தால், காற்று மாசுபடுவதால் சர்வதேச அளவில் ஆண்டொன்றுக்கு 75 லட்சம் பேர் பலியாவார்கள்.

இந்தியாவில் மட்டும் 17 லட்சம் பேரும், சீனாவில் 25 லட்சம் பேரும் மரணம் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.