காதலர் தின ஸ்பெஷல் – உங்கள் ராசிக்கு எப்படி?

காதலர் தினமான இன்று உங்களுக்கு காதல் உணர்வு எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள்!..

மேஷம் – நிச்சயம் காதலிப்பர், காதலிக்கப்படுவர், காதலிக்க ஏற்ற குணம், முரண்டு பிடிக்கும் எண்ணம்.

ரிஷபம் -எளிதில் கவர்ந்து காதலிக்க வைக்கப்படுவதில் கில்லாடி, தூய்மையான காதலுக்கு சொந்தக்காரர்.

மிதுனம் – தங்களையே காதலிக்கும் இயல்பு குணம் உண்டு. பிற காதலை ஏற்க ரொம்ப யோசிப்பர்.

கடகம் –வேண்டாமென ஒதுக்கிப் போய் விடுவர், தானாக தவிர்ப்பதால் தோல்வியிலிருந்து தப்பித்துக் கொள்வர்.

சிம்மம் –காதலை மகத்துவமாய் எடுத்துக் கொள்வர், இதயத்தில் இருக்கும் சிறந்த காதலை வெளிப்படுத்த தெரியாது.

கன்னி –அன்போடு கடமை உணர்வும் கொண்டவர்கள், யோசித்தே காதலில் ஈடுபடுவர்.

துலாம் –கை வந்த கலை காதல், எளிதாக காதல் வாய்க்கும், ஆனால் திருமணத்தில் முடியாது.

விருச்சிகம் –காதலை அதிகம் காதலிப்பர், தன்னை பிறர் காதலிக்க வேண்டும் என காத்திருப்பார்.

தனுசு –திறமையாக காதலை கையாண்டு வெற்றி பெறுவர், ஆயுள் முழுவதும் காதலியேயே வாழ்க்கையை செலவழிப்பார்.

மகரம் –காதல் இல்லாமல் இருக்க முடியாதவர், காதலுக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்.

கும்பம் –உண்மை உயிர் என காதலை கொண்டாடுவர், புரிந்து கொள்வதும் புரிந்திருப்பதுமே காதல் என நம்புவர்.

மீனம் –அன்பும் பொறுமையும் நிலைத்திருப்பது போல் காதலும் அதில் வெற்றியும் நிலையாய் பெறுபவர், அன்பிற்காக அனைத்தையும் இழப்பவர்.