காதலர்களுக்கு ஏற்ற உட்டோர்டா பீச் – கோவா!

உட்டோர்டா பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்களுக்கு மத்தியிலே, அதன் தங்க மணற்பரப்பில் படுத்துக்கொண்டு மதுவையும், கடல் உணவுகளையும் ருசிக்கும் அற்புதமான அனுபவத்தை வாத்தைகளால் விவரிக்க முடியாது.

Image result for Utorda Beach

Image result for Utorda Beach

இந்த கடற்கரையின் பேரமைதியின் காரணமாக இங்கு இயற்கை காதலர்களும், நடைபயணம் செல்ல விரும்புவர்களும், தனிமை விரும்பிகளும் அதிக அளவில் கூடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் கோவாவின் மற்ற கடற்கரைகளை போல இங்கு இடைத் தரகர்களின் தொல்லை உங்களுக்கு இருக்காது.

உட்டோர்டா பீச்சில் பயணிகளின் பாதுகாப்புக்காக எண்ணற்ற பாதுகாப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே எந்த கவலையும் இல்லாமல் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்டோர்டா பீச்சில் நீந்தித் திளைக்கலாம்.

Image result for Uttorta Beach

மேலும் கோவா தலை நகர் பனாஜி, உட்டோர்டா பீச்சிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் உட்டோர்டா பீச்சுக்கு அருகில் இருக்கும் மஜோர்டா ரயில் நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.