களனிவெளி புகையிரத பாதை எதிர்வரும் 16-ம் திகதி மூடப்படும்…!

களனிவெளி புகையிரத பாதை எதிர்வரும் 16-ம் திகதி இரவு 08.00 இலிருந்து 19-ம் திகதி காலை 4.00 மணி வரையில் முழுமையாக மூடப்படும் என புகையிரத மேலதிக பொது மேலாளர் விஜய சமரசிங்க அறிவித்துள்ளார்.

குறித்த பாதையூடாக சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் பயணிக்கும் அனைத்து புகையிரதங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

புகையிரத பாதையின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு வேலை காரணமாகவே குறித்த புகையிரத பாதை மூடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.