கல்வியியல் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் மார்ச் மாதத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்…!!!

 

இவ்வாண்டில் கல்வியில் கல்லூரிக்கு அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக கல்விப்பொதுதராதர உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவ்வருட கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி தலைமை ஆணையாளர் கே.எஸ்.பண்டார அறிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆரம்பக்கல்விக்காக இம்முறை பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
கல்லூரியில் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 3ஆயிரத்து 500 ரூபாவிலிருந்து 5ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நாடுமுழுவதிலும் உள்ள 19 கல்வியியற் கல்லூரிகளில் 8ஆயிரத்து 500 மாணவர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.