கல்கிஸ்சை பிரதேசத்தில் பெருகும் விபசார விடுதிகள்!

கடந்த ஆண்டு முதல் கொழும்பு பகுதியை அண்டிய பிரதேசங்களில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வரும் பல்வேறு விபசார விடுதிகள் சுற்றி வலைக்கப்பட்டன.

இந்நிலையி்ல் கல்கிஸ்சை, பிரிவென வீதியில் மற்றுமொரு  நடமாடும் விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்சை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்டது.

இதன்போது அதனை நிர்வாகித்த ஆண் ஒருவரும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 23, 28 மற்றும் 35 வயதுடைய நுகேகொட பிரதேசம் மற்றும் மஹரகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று கல்கிஸ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.