கலெக்டருக்கு வாழ்த்துகள்… சிவகார்த்திகேயன் பாராட்டு!

சென்னை : கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அறம்’.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. விமர்சன ரீதியாக ‘அறம்’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் இப்படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அறம் படத்தைப் பாராட்டியுள்ளார். ‘செய்தியாக மட்டுமே கடந்து வந்ததை ரொம்ப அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். படமாகப் பார்க்கும்போது இவ்வளவு பெரிய பிரச்னையா என்பதை உணர முடிகிறது.

குழந்தையின் மூலமாகச் சொல்லும்போது, அதன் வலி இன்னும் அதிகமாக இருக்கிறது. இயக்குநர் கோபி நயினாருக்கு வாழ்த்துகள்.

பொழுதுபோக்கு அம்சம் என்பதே இப்படத்தில் கிடையாது. என்ன நடக்கிறதோ, அதை அப்படியே படமாக எடுத்திருக்கிறார்கள். கலெக்டர் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் நயன்தாராவுக்கும் வாழ்த்துகள்’ என சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.