கலக்க வருகிறது ஜி.வி இன் முரட்டு சிங்கிள் – காதலர் தின ஸ்பெஸல்…!

`ஜாக்சன் துரை’ படத்திற்கு பிறகு தரணிதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’.

 

‘மெட்ரோ’ புகழ் சிரிஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சந்தினி தமிழரசன் நாயகியாக நடித்திருக்கிறார். சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. குற்றப் பின்னணியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிரிஷ் பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

virgin

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று நாளை வெளியாக இருக்கிறது. காதலர் தினத்தை காதலர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்பதில்லை. காதலிக்காத தனி நபர்களும் கொண்டாடலாம் என்பதை சொல்லும் பாடலாக முரட்டு சிங்கிள் பாடல் வெளியாக இருக்கிறது. அந்த பாடலின் டைட்டிலை பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிடுகிறார்.

gv