கதாநாயகியாக அறிமுமாகும் ஸ்ரீதேவியின் ஜான்வி…

மராட்டிய வெற்றிப் படத்தின் இந்தி ரீமேக் மூலம் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுமாகவுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சினிமாவில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

இப்போது ஜான்வி ஒரு படத்தில் நடிக்க உள்ளார், இதற்கு ஸ்ரீதேவி அனுமதி வழங்கியுள்ளார் மராட்டிய மொழியில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ‘சாய் ராட்’. இப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

இப்படத்தில் ஜான்வி கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஜான்வி சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஏற்கனவே இந்தி திரை உலகில் எதிர்பார்ப்பு இருந்தது, தற்போது அவர் நடிக்க வருவதற்கு இந்தி பட ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

ஜான்வி சினிமாவில் நடிப்பது ஸ்ரீதேவி கூறுவது:
நான் சினிமா துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். எனது மகளும் இந்த துறையை தேர்ந்து எடுத்து இருக்கிறாள். அவள் என்னைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறாள். 
மனதளவில் நான் அவளை நன்றாக தயார்படுத்தி இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். எனவே திறமையாக செயல்படுவாள். சினிமாவில் நடிப்பது பற்றி அவளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. எனவே கடினமாக உழைப்பாள். எந்த சவாலையும் சந்திப்பாள். இதை நான் உறுதியாக சொல்கிறேன் என கூறியுள்ளார்.