கண் திருஷ்டியை இப்படியெல்லாம்கூட கண்டுபிடிக்க முடியுமா?

செல்வச் செழிப்பாகவோ நிம்மதியாகவோ மகிழ்ச்சியாகவோ இருக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள அத்தனைபேருடைய பார்வையும் நம் மேல் தான் இருக்கும். அந்த பார்வை நம்மை கண்டு வியந்தால் கூட பரவாயில்லை. ஆனால் பொறாமை நோக்கோடு பார்த்தால், அந்த கெட்ட எண்ணங்களின் தாக்கம் நமக்கு உண்டாகும்.

கொழுகொழுவென ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும் குழந்தைகள் மீது ஏராளமானோரின் பார்வை படும். அதில் கெட்ட எண்ணத்துடனும் பொறாமை குணத்துடனும் பார்க்கும் பார்வையால், குழந்தையின் உடல் நலம் பாதிப்பதுண்டு.

அப்படி நம்முடைய குழந்தைகள் மீது கண்ணேறு பட்டிருக்கிறதா? இல்லையா என்று எப்படி கண்டுபிடிக்கலாம்? அதை எப்படி சரிசெய்து கொள்ள முடியும்.

குழந்தைகள் இரவு தூங்கும் போது, படுக்கைக்கு வலதுபுறத்தில் தலைப்பகுதியில் ஒரு கிளாஸ் தண்ணீரை வைத்துவிட்டு, காலையில் அந்த தண்ணீரை எடுத்து வெளியே ஊற்றிவிட வேண்டும்.

குழந்தை தூங்கி எழுந்திருக்கும் பொழுது, அவர்களின் கண் முன்னே தாய் கட்டாயம் இருக்க வேண்டும்.

அம்மா எப்போதும் குழந்தைக்கு அருகில் தான் உறங்க வேண்டும். அப்போது தான் குழந்தை பாதுகாப்பாக உணரும்.

ஒருவேளை குழந்தைக்கு உடல்நிலை ஏதேனும் சரியில்லாமல் போனால், அது இயல்பாக உடல் உபாதையாலா அல்லது கண்ணேறு பட்டதாலா என்று எப்படி தெரிந்து கொள்வது? அதற்கும் ஒரு எளிமையான வழியுண்டு.

ஒரு சிறிய கல் (செங்கல் துண்டு)  எலுமிச்சை பழத்தின் அளவுடையதாக எடுத்து, குழந்தையின் தலையைச் சுற்றி, வடப்புறமாகவும் பின் இடப்புறமாகவும் மூன்றுமுறை சுற்றி, இரண்டு நிமிடங்கள் தண்ணீருக்குள் போட்டு, வெளியே எடுத்து, இரவு குழந்தை தூங்கும் அறையில் ஓர் மூலையில் வைத்துவிட வேண்டும்.

ஒருவேளை குழந்தைக்கு திருஷ்டி பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால், அந்த கல் உடைந்தோ அல்லது காணாமலோ போயிருக்கும்.