கண்டி மருத்துவமனையின் சிறுநீரக நோய்சிகிச்சை அறைக்கு சீல்!

கண்டி மருத்துவமனையில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் 69 ஆம் இலக்க அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அந்த சிகிச்சை அறையில் ஏ.எச்.வன்.என்.வன் நோய் பரவிவருவதால் இவ்வாறு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த அறையில் சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளர்கள் திடீரென உயிரிழந்துள்ளனர்.

பின்னர் மேற்கொண்ட சோதனையில் இரண்டு நோயாளர்கள், ஏ.எச்.வன்.என்.வன் நோய் பரவி உயிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்பின்னர் அறையின் தொற்றை நீக்குவதற்காக மூடப்பட்டுள்ளது.

மீண்டும் திறப்பதற்கு வாய்ப்பு நிலவுவதாக கண்டி மருத்துவமனையின் சிரேஸ்ட்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.