கணவனை கொன்று பல வருடங்களாக மறைத்து வைத்திருந்த மனைவி!

மும்பையின் பொய்ஸார் பகுதியைச் சேர்ந்தவர் ஃபரீதா பாரதி (43). இவர் பாலியல் தொழில் நடத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் கடந்த திங்களன்று பொலிஸார் இவரது வீட்டை  சோதனையிட்டனர்.

இதன்போது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நான்கு பெண்களை மீட்ட பொலிஸார், பாரதியையும் வாடிக்கையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாலியல் தொழில் மட்டுமன்றி, அவரது கணவர் உட்படப் பலரைக் கொலை செய்தவர் பாரதி என்ற தகவலும் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.

இதை அடிப்படையாக வைத்து பாரதியை பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். இதன்போது, தனது கணவரைக் கொலை செய்ததாக பாரதி ஒப்புக்கொண்டுள்ளார்.

பதின்மூன்று வருடங்களுக்கு முன், உறங்கிக்கொண்டிருந்த தனது கணவரின் தலையில் அடித்துக் கொலை செய்ததாகவும் அவரது உடலை தனது வீட்டின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுத் தொட்டியில் போட்டுப் புதைத்ததாகவும் பாரதி கூறியுள்ளார்.

பாரதியின் வீட்டுக் கழிவறையைத் தோண்டிய தோண்டிய போது, பாரதியின் கணவரின் எலும்புகள் சிலவற்றைக் கண்டெடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.