கணவனின் வாயில் இரத்தம் குடித்து கொன்ற கொடூர மனைவி!….

சபித்திரி எனும் இந்த பெண்மணி பெங்காலின் பிர்பும் அருகே இருக்கும் சைரைபூர் எனும் பகுதியில் வசிப்பவர்.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சபித்திரி தனது கணவர் அபிஜித்தின் நாக்கில் திரிசூலத்தை குத்தி அவரது வாயில் இருந்து வரும் இரத்தத்தை குடித்து வந்துள்ளார். இதை இவர் ஒருவிதமான சடங்கு போல பின்பற்றி வந்துள்ளார்.

சபித்திரியின் மாமியார், “தனது மருமகள் ஒவ்வொரு நாளும் தன் மகனின் (அபிஜித்தின்) நெஞ்சின் மீது அமர்ந்து அவனது வாயில் இருந்து இரத்தத்தை உறுஞ்சி குடித்து வந்தாள்” என்ற தகவலை கூறியுள்ளார்.
சபித்திரியின் வீட்டருகே வசித்து வந்தவர்கள், “இவர் எப்போதுமே சற்று விசித்திரமாக தான் நடந்துக் கொள்வார். அவரது ஒவ்வொரு செயலும் காண வித்தியாசமாக தான் இருக்கும். நாங்கள் அவரை சூனியக்காரி என்று தான் கருதினோம்.” என கூறியிள்ளனர்.

சபித்திரியின் இந்த விசித்திர பழக்கத்தால், இவரது கணவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு உடலில் இரத்த பற்றாக்குறை இருக்கிறது என அறியப்பட்டுள்ளது.

இதற்காக மருத்துவமனை சென்று இரத்த ஏற்றியும் உள்ளனர். ஆனாலும், தொடர்ந்து சபித்திரி தினமும் அவரக்கு ஏதோ சடங்கு செய்து இரத்தம் குடித்து வந்ததால், அவர் உடலில் போதியளவு இரத்தம் இன்றி இறந்துள்ளார்.