கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது!

January 3, 2017 இலங்கை செய்திகள் Leave a comment 64 Views

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினரால் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக 350 சிகரெட் அட்டைப்பெட்டிகளை நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட போதே குறித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் இருந்து நாட்டுக்கு வருகைத்தந்த கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி சுமார்  35  இலட்சம் என சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளை சுங்கப்பிரிவினர் கையகப்படுத்தியதுடன், குறித்த சந்தேக நபர்களுக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.