கங்குலிக்கு மிரட்டல் கடிதம்விடுத்த மர்ம நபர்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் கங்குலியின் வீட்டிற்கு மிரட்டல் கடிதம் ஒன்று நேற்று வந்துள்ளது. கடிதத்தில் எழுதியவர் யார் என்பது தொடர்பாக எவ்வித தகவலும் இல்லை.

மித்னாபூர் மாவட்ட கிரிக்கெட் அமைப்பு சார்பில் வித்யாசகர் பல்கலைக் கழகத்தில் வருகின்ற ஜனவரி 19-ம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள நிலையில் இந்த மிரட்டல் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மித்னாபூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கங்குலி மிரட்டல் தொடர்பாக புகார் ஒன்றினை அளித்தார்.

சவுரங் கங்குலியின் வீட்டிற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.