ஓவியாவான ஜீலி..!

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை ஓவியா. இவருக்கு எதிர்மறையாக அதே நிகழ்ச்சி மூலம் மக்களின் வெறுப்பை சம்பாரித்தவர் ஜூலி. இவர் நிகழ்ச்சியில் பல பொய்களை கூறி மக்கள் அனைவரின் திட்டிற்கு ஆளானார்.

மேலும், இவர் தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சியில் சுட்டிஸ் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு இவர் மாதம் 10 லட்சம் சம்பளமாக வாங்குகிறார். இந்த நிலையில் ஜுலி அவருடைய ட்விட்டர் பகுதியில் ஒரு புதிய புகைப்படத்தை போட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் ஏன் ஓவியாவை காப்பியடிக்கிறார் என்று மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதேபோல் ஒரு லுக்கில் ஓவியாவின் ஒரு புகைப்படம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.