மேல் மாகாணத்தில் 1262 பேர் அதிரடி கைது!

October 14, 2016 இலங்கை செய்திகள் Leave a comment 302 Views

நேற்றிரவு பொலிஸாரால் மேல் மாகாணத்தில் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் சந்தேகத்தின் பேரில் 1262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இந்த சுற்றிவளைப்புகளில் மேல் மாகாணத்தச் சேர்ந்த 3072 பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு 11 மணிமுதல் அதிகாலை 1 மணி வரை குறித்த சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார்.

இதில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 46 பேர் அடங்குவதாகவும் சந்தேகத்தின் பேரில் 540 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 177 பேரும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் 17 பேர் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 23 பேர் இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 103 பேர், விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தியவர்கள் 323 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற இருவர் மற்றும் முப்படையிலிருந்து தப்பிச்சென்ற நால்வரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.