ஒரு நண்பரிடமிருந்து இரண்டு பேஸ்புக் ரிக்வெஸ்ட் வருகிறது! அவதானம்!

பலரது ஐடி ஹேக் செய்யப்படுகிறது. இதற்கு பாஸ்வேர்டு மாற்றினால் மட்டும் போதாது.
நம்ம ஐடி நம்ம போட்டோஸ்ல வேற ஐடி இருக்கிறதா என்று பரிசோதனை  செய்ய வேண்டும்.
ஃபேஸ்புக்கில் உள்ள பலரது பெயர்களில் போலிக் கணக்குகள் தொடங்கப்படுகின்றன. உங்கள் ப்ரொஃபைல் படத்தைக் களவாடி, உங்கள் பெயரில் போலியான கணக்கைத் தொடங்குகிறார்கள் சில விஷமிகள்.

அந்தப் போலி ஐடியிலிருந்து, ஏற்கெனவே உங்களின் நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புகிறார்கள். அதைப் பார்க்கும் நட்புகள் அந்த ஐடி நீங்கள் தான் என நினைத்து கன்ஃபர்ம் கொடுத்து விடுவார்கள்.

அதன்பின் தாங்கள் விரும்பும் படங்களையும், தவறான விஷயங்களையும் உங்கள் பெயரில் விஷமிகள் பதிவேற்றுவார்கள்.

உங்கள் நட்பு வட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் என்னிடமிருந்து இன்னொரு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தால் தயவு செய்து அதை யாரும் ஏற்க வேண்டாம்.