ஒருதலை காதலின் விபரீதம்!

இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் காலணியைச் சேர்ந்தவர் இந்துஜா. இவரது பள்ளி கால நண்பர் ஆகாஷ். கடந்த ஒருமாத காலமாக இந்துஷாவை ஒருதலையாக காதலித்துள்ளார்.
ஆனால் இந்துஜா மறுத்துள்ளதால், தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இவரது வீட்டிற்கு நேற்று இரவு ஆகாஷ் என்ற இளைஞர் வந்துள்ளார். அப்போது பெட்ரோல் கேன் ஒன்றை கொண்டு வந்தார்.

இதையடுத்து இந்துஜா மீது பெட்ரோலை ஊற்றியுள்ளார். இதற்கிடையில் அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டைச் சேர்ந்தோர் வந்து, ஆகாஷை தடுத்தனர். ஆனால் லைட்டரை பற்ற வைத்ததால், உடனே தீப்பற்றிக் கொண்டது.

அங்கிருந்து அவர் தப்பித்துச் சென்றுவிட்டார். இதற்கிடையில் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்துஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் இந்துஜாவின் தாய், சகோதரி, பக்கத்து வீட்டுக்காரர் ஆகியோரும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருதலைக் காதலால் ஏற்படும் விபரீதங்கள் தொடர்ந்து வருவது வேதனை அளிக்கிறது.
குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, மனித உயிர்கள் மீதான அன்பும், அரவணைப்பும் அதிகரிக்க வேண்டும்.