ஏலியனுக்கு எதிராக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட “டெஸ்லா” கார்!

“ஸ்பேஸ் எக்ஸ்” டெஸ்லா காரை விண்வெளிக்கு அனுப்பி உள்ளது.

இதையடுத்து பூமிக்கு வெளியே இப்போது முதல் கார் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

உலகின் பெரிய ராக்கெட்டான ”ஃபல்கான் ஹெவி” ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது.

இதில்தான் அந்த “செர்ரி ரெட் டெஸ்லா” கார் இருக்கிறது. காரை விண்ணுக்கு அனுப்பிய எலோன் மஸ்க் “இந்த கார் வானத்தில் மிதந்து கொண்டு இருக்கிறது.

Untitled-1அதை எதிர்காலத்தில் வரும் ஏலியன்கள் பார்க்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

மேலும் விண்வெளிக்கு அனுப்பிய காரில் ஏலியனுக்கு செய்தி ஒன்று அனுப்பி உள்ளனர்.

காரின் அனைத்து சர்க்யூட் போர்டுகளிலும்  “இது பூமியில் மனிதனால் தயாரிக்கப்பட்டது” என்று எழுதி இருக்கிறது.fdh

இதில் விண்வெளி உடை அணிந்த பொம்மை மனித உருவம் ஒன்றும் கார் ஓட்டும் இடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு ஸ்டார் மேன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும் எனப்படுகிறது.

மேலும், இந்த காருக்குள் அனைத்துப் பக்கமும் பெரிய கெமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கெமரா மூலம் பூமிக்கு புகைப்படம் அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். அத்துடன் வீடியோவும் அனுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.