எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் யாழில் பல்கலை ஆரம்பம்…….

மாணவர்களின் நிர்வாக முடக்கல் போரா ட்டத்தையடுத்து நிறுத்தப்பட்ட கலை, விஞ்ஞானம் மற்றும் முகா மைத்துவக் கற்கைகள்வணிக பீடங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக த்தின் பிரதான வளாகத்தை எல்லா மாணவ ர்களுக்கும் உட்புகுவதற்குத் தடைவிதிக்கப்பட்ட பிரதேசமாக அறிவித்திருந்தமை 12.11.2017 (ஞாயிற்றுக்கிழமை) ஆம் திகதி யிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் விலக்கப்படுகிறது.

 

30.10.2017 மற்றும் 31.10.2017 அன்று நடைபெறவிருந்த விஞ்ஞானபீடப் பரீட்சை கள் முறையே 13.11.2017 மற்றும் 14.11.2017 ஆம் திகதிகளில் நடைபெறும். இரண்டாம் அரையாண்டிற்கான கல்வி நடவடிக்கை கள் யாவும் 15.11.2017ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றன.

 

30.10.2017ஆம் திகதியிலிருந்து நடைபெறவிருந்த முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட நடு அரையாண்டுப் பரீட்சைகள் 13.11.2017ஆம் திகதியிலிருந்து நடை பெறும் என அறிவித்துள்ளார்.

 

விடுதிகளில் தங்கியிருக்கும் மேற்படி பீட மாணவர்கள் 12.11.2017 அன்று காலை தொடக்கம் விடு திகளுக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.