உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு…!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்குச்சீட்டு மற்றும் வாக்குப்பெட்டி விநியோகப் பணிகள் இன்று காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

340 உள்ளுராட்சி மன்றங்களின் 8 ஆயிரத்து 325 உறுப்புரிமைக்காக, 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றதோடு,இதில் வாக்களிக்க ஒரு கோடியே 57 லட்சத்து 60 ஆயிரத்து 860 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், ஒரு லட்சத்து 75 ஆயிரம் அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்களுக்கோ அல்லது வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கோ மது போதையில் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.