உள்ளாடை விலகியதால் ஐஸ் ஸ்கேட்டிங் நடன ஜோடிக்கு புள்ளிகள் குறைப்பு!

தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிப்ரவரி 9-ஆம் திகதி தொடங்கி 25-ஆம் திகதி வரை நடந்து வருகிறது.

நேற்று நடைபெற்ற ஐஸ் ஸ்கேட்டிங் நடன போட்டியில் தென் கொரியாவின் யுரா மின்- அலெக்சாண்டர் கேமிலின் ஜோடி கலந்து கொண்டு ஸ்கேட்டிங் நடனத்தை மேற்கொண்டார்கள்.

அப்போது திடீரென யுராவின் மேலாடையின் பின்பக்க கொக்கி கழன்றது. இதையடுத்து நடனத்தை நிறுத்தாத யுரா, கீழே இறங்கிய மேலாடையை மீண்டும் மேலே தூக்கிவைத்து கொண்டே சமாளித்து நடனமாடி முடித்தார்.gjh

இப்போட்டியில் யுரா – அலெக்சாண்டர் ஜோடிக்கு 51.97 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடம் கிடைத்தது. போட்டிக்கு பின்னர் யுரா கூறுகையில், உடையில் இருந்த கொக்கி திடீரென கழன்றது, ஆனாலும் நடனத்தை நான் நிறுத்தவில்லை, காரணம் பாதியில் நிறுத்தினால் புள்ளிகள் கழிக்கப்படும். இனி இது போல நிகழாமல் இருக்க நானே என் துணியை தைத்து கொள்ளவுள்ளேன் என கூறியுள்ளார்.