உலக அழிவிற்கு வித்திடப்பட்டு விட்டது கடவுளின் துகள்!

உலகம் சட்டென்று அழிந்துவிடும் அபாயம் ஒன்றும் அருகில் இல்லை ஆனாலும் விஞ்ஞானமே உலகை அழித்துவிடும் என்பதனை மட்டும் எப்போதும் மறந்துவிடல் ஆகாது.

அதிகப்படியான அறிவியல் வளர்ச்சி உலகை அழிவுப்பாதை நோக்கியே நகர்த்திச்செல்கின்றது என்பது அறிந்த பழைய கதைதான்

கடந்த 2012ஆம் ஆண்டு உலகம் அழியப்போகின்றது என்ற செய்திகள் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவேகமாக பரவியது. இதனை உண்மை என நம்பி அப்போது தற்கொலை செய்து கொண்டவர்களும் இருக்கின்றார்கள்.

அதே 2012ஆம் ஆண்டு இன்னுமோர் விடயம் உலகில் நடைபெற்றது. அழிவுக் கதைகள் பொய்யாகிப் போனது என்னமோ உண்மைதான் ஆனால் அதே 2012 ஆம் ஆண்டு அழிவிற்கான ஆரம்பப்புள்ளி போடப்பட்டது என்பது மட்டும் உண்மை.

அதே 2012 ஆம் ஆண்டு கடவுளின் துகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஹிக்ஸ் போசான் (Higgs Boson) என்பது நிறையுடைய ஓர் அணுத் துகள் இது கடவுளின் துகள் எனக்கூறப்படுகின்றது.

13.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பெரு வெடிப்பு (Big Bang) காரணமாகவே அண்டம் உருவானது.

அந்த பெருவெடிப்பின் காரணமாகவே பிரபஞ்சம், நட்சத்திரங்கள், பால்வீதிகள், கருந்துளைகள் உட்பட அனைத்துமே தோற்றம் பெற்றதாக நம்பும் விஞ்ஞானிகள் இது சாத்தியமா? அதனை உருவாக்கியது யார் என்ற கேள்விக்கான விடையை தேட ஆரம்பித்தனர்.

அதற்கான ஆராய்ச்சியே ஹிக்ஸ் போசான். 45 வருடங்களாக தேடப்பட்ட ஆய்வில் பூமிக்கடியில் 300 அடி ஆழத்தில் சுமார் 27 கிலோமீற்றர் நீளத்திற்கு ஒரு வட்டத்தை அமைத்து அதில் புரோத்திரன்களையும், நியூட்ரோன்களையும் எதிர் எதிர் திசையில் ஒளியைவிடவும் மிக வேகமாக பயணிக்கச் செய்து ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அதன் துகளை கண்டுபிடிப்பதே ஹிக்ஸ் போசான் ஆய்வாகும்.

துகள் அணு அளவுதான் ஆனால் அதனால் ஏற்படும் விளைவு வர்ணிக்க முடியாததாகும். இந்த அணு மோதலினால் உருவாகும் கடவுள் துகளில் கவலைக்குரிய விடயமாக 100 பில்லியன் கிகா எலக்ட்ரான் – வோல்ட்டிற்கும் அதிகமான ஆற்றலில் அது அதிநிலைத்தன்மை பெறலாம்.

அதனால் வெற்றிடக் குமிழ் ஒளியின் வேகத்தில் விரிவு பெறும்.

இத்தகைய நிகழ்வு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், அது வருவதை நம்மால் பார்க்க முடியாது. ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் அது உலகத்தையே ஆட்டிப்பார்த்துவிடும் ஓர் ஆய்வு இது என்பதை பொதுவாக வெளிப்படுத்தப்படவில்லை.

இந்தவகையிலான ஒட்டு மொத்த உலகையும் அழித்துவிடும் நோக்கத்தோடு கூடிய ஆய்வின் முதல் கட்டமாக 2012ஆம் ஆண்டு கடவுளின் துகளைக் கண்டு பிடித்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறினார்கள். அதற்கு மறுபக்கத்தில் உலகம் அழிந்து விடும் என்ற செய்தியும் பரவியது இதனால் கடவுளின் துகள் கூறும் ஆபத்து எவருக்கும் சென்றடையவில்லை.

மாபெரும் விஞ்ஞானியும், இயற்பியல் மேதையுமான ஸ்டீபன் ஹாக்கிங் “ஹக்ஸ் ஆய்வின் மூலம் மூலம் 2012ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இன்றும் பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒன்றாக இணைந்து இந்த கடவுளின் துகள் ஆய்வில் தொடர்ந்தும் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கின்றனர்.