உலகின் மிகக் காரமான மிளகாய் பற்றி தெரியுமா???

உலகின் மிகவும் காரமான மிளகாயால் தயாரான SAUCEகள் மிக வேகமாக அமெரிக்காவில் விற்பனையாகி வருகின்றன.
இதற்கு முன்னதாக கரோலினா ரீப்பர் என்ற மிளகாய், மிகவும் காரமானது  என கூறப்பட்டது. இந்நிலையில் பெப்பர் X என பெயரிடப்பட்டுள்ள இந்த மிளகாய் இதற்கு முன் அதிக காரம் என்று சொல்லப்பட்டு வந்த, கரோலினா பெப்பரை விட1.6 கோடி  மடங்கு காரமானது என இதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காரமான மிளகாயை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தில் உள்ள டென்பிஸ்சரில் இருக்கக்கூடிய மைக் ஸ்மித் என்பவர் தான்.

நாட்டிங்ஹாம் பல்கலையுடன் இணைந்து அவர் இந்த மிளகாயை உருவாக்கியுள்ளார். ஸ்மித் இதைப்பற்றி கூறும் போது, நான் இத்தகைய மிளகாயை திட்டமிட்டு உருவாக்கவில்லை என்றும், ஒரு விபத்தைப் போலவே இந்த மிளகாய் உருவாகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

100 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் அதிகபட்சம் சுமார் 4.72 கிராம் அளவுள்ள காரத்தை தாங்கும் திறன் பெற்றிருப்பார். ஆனால், இந்த மிளகாய் சுமார் 3.18 மில்லியன் அளவிற்கு காரச்சுவையை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.

இந்த மிளகாயை நேரடியாக சுவைத்தால் அதிர்ச்சியில் உடனே இறந்துவிடும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய மிளகாயிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த sauce நீர்த்துப்போன வினிகர், இஞ்சி வேர், சந்தன வகைகள், சீரக, கொத்தமல்லி, கடுகு போன்றவற்றைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது