உடல் உறுப்பு தானம் செய்த “தீரன்” நாயகி!

ரகுல் ப்ரீத் சிங்“ தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் கார்த்தியுடன் ஜோடிபோட்டவர் அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார். ரகுல் தனது உறுப்புகளை தானம் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியது: உடல் உறுப்புதானம் பற்றிய கட்டுக்கதைகளிலிருந்து ஒவ்வொருவரும் ஒதுங்கி நிற்க வேண்டும்.
உறுப்புதானம் என்ற உன்னதமான பணியில் தங்களை இணைத்துக் கொண்டு உயிர்களை காப்பாற்ற முன்வரவேண்டும். உறுப்பு தானம் செய்வதன் மூலம் ஒருவரால் 8 உயிர்களை காக்க முடியும். மேலும் 50 பேருக்கு நல்வாழ்வு அளிக்க முடியும்’ என்றார். உறுப்புதானம் செய்ததன் மூலம் கமல்ஹாசன், மணிரத்னம், சமந்தா போன்றவர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் ரகுல்.