உறுதியான நயன் விக்னேஷ் சிவன் திருமணம் ?

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் உள்ளதாகவும், இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் வந்தன.

அவ்வப்போது நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அவை வைரலாக பரவும்.

ஆனால் இருவரும் தங்கள் காதல் குறித்து இதுவரை ஊடகத்தில் பேசவே இல்லை.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷனுக்காக விழா ஒன்று நேற்று சென்னையில் நடைபெற்றது.

 இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திடம் பல சுவாரஸ்யமான கேள்விகளை தொகுப்பாளர்கள் கேட்கப்பட்டனர்.

குறிப்பாக இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் எப்போது திருமணம்? யாருடன் திருமணம்? பிடித்த நடிகை யார்? என பல கேள்விகளை கேட்டனர்.

ஆனால் அவர் நேரடியாக பதில் சொல்லாமல் வெகு நேரமாக சமாளித்தார்.

ஆனாலும் தொடர்ந்து தொகுப்பாளர்கள் கேள்விகளை கேட்க அந்த கேள்விக்கு முடிவு கட்டும் விதமாக இசைமைப்பாளர் அனிருத், நீங்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் ஒரே பதில் நயன்தாராதான், போதுமா என்றார்.

விக்னேஷ் சிவன், நயன்தாராவை திருமணம் செய்ய உள்ளதை அனிருத் உறுதி செய்தார்.