உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் கோதுமை காபி!!!

தேவையான பொருட்கள் :

தோல் நீக்கப்பட்ட சுத்தமான முழு கோதுமை – 500g
மல்லி – 50 g
பனை வெல்லம் – தேவைக்கேற்ப

 

செய்முறை :

முழு கோதுமையை ஒரு பாத்திரத்தில்  போட்டு நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும். (கறுகக் கூடாது, நல்ல பதத்தில் இருப்பது முக்கியம்)

வறுத்த கோதுமையை மிக்ஸியில் போட்டு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

மல்லியையும் சிவக்க வறுத்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

இந்தக் காபி பவ்டரை இரண்டு டீஸ்பூன் பால் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து பனை வெல்லம் கலந்து குடிக்கலாம்.

இதன் சுவை காபியின் சுவை போலவே இருக்கும். சுவைக்கு சுவை, ஆரோக்கியத்துக்கும் நல்லது.

இந்த காபியை தொடர்ந்துக் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் குறையும்.

முழு கோதுமையுடன், சுவை சேர்க்க ராகி, சோளம் இரண்டையும் சேர்த்து வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.