உணவு ஒவ்வாமை காரணமாக 42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!!

டயகம தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் குறித்த தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி டயகம பகுதியில் இடம்பெற்ற ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உண்ட சிலர் இவ்வாறு நோய்வாய்குட்பட்டமை தெரியவந்துள்ள நிலையில்  சுகாதார பரிசோதகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் டயகம வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாகவும் எவருக்கும் ஆபத்தான நிலை இல்லை எனவும்  வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொது சுகாதார பரிசோதகர்களும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.