உணவுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை – நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை!!!

இன்று இடம்பெறவுள்ள வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான கூட்டத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளுக்கான கட்டுப்பாட்டு விலையை அமுலுக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்துள்ளார்.