உடல் நலம் காக்கும் அதிகாலை தோப்புகரணம்!

அதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் சிறந்த உடற்பயிற்சியாகும்.
தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் உண்மை. 48 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் தண்டனையாகவும் பயிற்றுவித்தனர்.
தோப்புக்கரணம் சுத்தமான சம தலமான இடத்தில் செய்ய வேண்டிய பயிற்சி.ஆடைகள் தளர்வாக இருத்தல் அவசியம்.
இரு கால்களையும் உடலின் அகலத்திற்கு வைத்து நின்றுகொள்ளவும், வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்துக்கொள்ள வேண்டும், இந்நிலையில் முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழவேண்டும்.
உட்காரும்போது மூச்சினை மெதுவாக உள்ளே இழுக்கவும், எழும்போது மூச்சினை மெதுவாக வெளியே விடவும். இப்பயிற்சியினை முதலில் 5 முறையும், பின் 7, 9, என்று பழகியபின் 21 முறை தோப்புக்கரணம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இதனால் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றில் உள்ள பிராணவாயு 70% மூளைக்கு சென்று உடலுக்கு புத்துணர்ச்சி, உள்ளத்திற்கு ஒரு நிலைப்பாடு கிடைக்கிறது.
நம் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு ஆரோக்கியம் அடைகிறோம். குழந்தைகளுக்கு மூளை செயல்பாடுகள் அதிகரித்து கல்வி, கேள்வி அறிவுச்செல்வம் பெருகுகிறது.
தோப்புக்கரணம் போடுவதால் உடலில் ஏற்படும் மாற்றம்?
தோப்புகரணத்தில் காது நுனிகளில் தொடுவதன் காரணமாக, மூளையின் நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல், ஞாபக சக்தி, அதிகரிக்கிறது.
உடலின் மந்தமான மனநிலை நீங்கி, புதுவித ஊக்கமும் உற்சாகமும் கிடைக்கிறது. அதோடு உடலின் ஆற்றல் சக்தியும் அதிகரிக்கிறது.
தோப்புக்கரணம் செய்வதால், மூளைக்கு இரத்தோட்டம் சீராகி, மனதில் ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு நீங்கி, உடலின் கை, கால்களின் தசைகள் வலிமையாகும்.
தோப்புக்கரணம், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றி வந்தால், பெண்களின் பிரசவம் எளிதாகும். அதோடு அல்சைமர், ஆட்டிசம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.